×

கறம்பக்குடி அருகே இலைகடிவிடுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

கறம்பக்குடி, மார்ச் 6: கறம்பக்குடி திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக ஊராட்சி சபை கூட்டம்  தெற்குதெரு, இலைகடிவிடுதி, களபம், எம் தெற்குதெரு, தீத்தானிப்பட்டி, பல்லவராயன்பத்தை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாஞ்சாலன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார். திமுக மேலிட பார்வையாளர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார். இதில் அனைத்து பெண்களும் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,

சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பங்களை காப்பாற்றும் வகையில் மது கடைகளை மூட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் மதியழகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மழையூர் ராமசாமி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பரிமளம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மீனம்பட்டி வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இலைகடிவிடுதி ஊராட்சி செயலாளர் மதி நன்றி கூறினார்.

Tags : DMK ,panchayat council meeting ,Alleppey ,Karambukudi ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி