×

இலுப்பூர் பகுதி சிவன் கோயில்களில் சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் வழிபாடு

இலுப்பூர், மார்ச் 6: இலுப்பூர் பகுதியில் உள்ள சிவன்கோயில்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசி நாதர் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. பட்டினத்தாரால் பாடப்பெற்ற இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நேற்று அதிகாலை வரை நான்கு கால பூஜைகளாக நடைபெற்றது. இதற்காக யாக  சாலை அமைக்கப்பட்டு  நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 11 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 1.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை,நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையாக நடைபெற்றது.

வழிபாட்டு நிகழ்ச்சியையொட்டி விழா மண்டபத்தில் பூஜைக்காக 108 சங்குகள் மற்றும் 108 கடங்கள் வைத்து  சிறப்பு பூஜைகள் செய்து முதற்கால பூஜையாக 108 சங்காபிஷேகம் மற்றும் நான்காம் காலபூஜை 108 கடம்அபிஷகமும் நடைபெற்றது. விழாவில் இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வழிபாட்டு நிகழ்ச்சியில் இரவு முழுவதும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Devotees ,festival ,Shivarathri ,Ilupur ,temples ,Shiva ,area ,
× RELATED திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்..!!