×

துப்புரவு பணியாளருக்கு தினக்கூலியாக ரூ.509 சிஐடியூ கோரிக்கை

புதுக்கோட்டை, மார்ச்6: அரசாணையின்படியும், நீதிமன்ற உத்தரவுப்படியும் நகராட்சி ஒப்பந்த,சுய உதவிக் குழு துப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.509ம், பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.412ம் வழங்க வேண்டுமென சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியூ) சார்பில் கிராம பஞ்சாயத்து ஊழியர்களுக்கான மாநில அளவிலான ஒருநாள் பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. முகாமிற்கு சம்மேளன மாநில இணைப்புக்குழு தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
‘ஊராட்சி ஊழியர்களும் நாடாளுமன்றத் தேர்தலும்’ என்ற தலைப்பில் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் கணேசன், ‘கிராமப் பஞ்சாயத்து ஊழியர் அரங்கத்தில் நமது பணி’ என்ற தலைப்பில் மாநிலத் தலைவர்  பாலசு ப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக நிர்வாகி திரவியராஜ் வரவேற்றார். நிர்வாகி முகமதுகனி நன்றி கூறினார்.

அரசாணை2(டி)62 நாள்:11.10.2017ன் படியும், உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவுப்படியும் நகராட்சி ஒப்பந்த, சுய உதவிக்குழு துப்புரவுத் தொழிலாளர் களுக்கு தினக்கூலியாக ரூ.509ம், பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.412-ம் வழங்க வேண்டும். நீர்த்தேக்கத்தொட்டி இயக்குனர்களுக்கு மாத ஊதியம் ரூ.11,236, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.9,934-ம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்துவரும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குனர் களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி மாத ஓய்வூ தியம் ரூ.2ஆயிரம், பணிக்கொடை ரூ.50 ஆயிதம் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : cleaning ,CITU ,cleaning staff ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு