×

குஞ்சப்பனை சோதனை சாவடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

ஊட்டி, மார்ச் 6:நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தடை விதித்து முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலில் உள்ளது. இந்நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, சாரணர் இயக்கம் சார்பில் குஞ்சப்பனை சோதனை சாவடியில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை குறித்தும், பிளாஸ்டிக்கால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சாரணர் இயக்க பொறுப்பாசிரியர் கிருஷ்ணராஜ், சாரணியர் இயக்க பொறுப்பாசிரியர் கஸ்தூரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லோகேஷ் அகியோர் மாணவர்களை வழி நடத்தினர். சுங்கச்சாவடி பிளாஸ்டிக் தடுப்பு அலுவலர் ஜான்சிராணி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.

Tags : checkpoint ,Kunjappanai ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...