×

அரசு கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன் தொழிற்சங்கத்தினர் திரண்டனர்

நாகை, மார்ச் 6: அரசு கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிப்பதை தடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுடன் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டப்படி காலிப் பணியிடங்களை ஒப்பந்தப்படி கொள்முதல பணியாளர்களை கொண்டு நிரப்பிட வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட  நெல் மூட்டைகள் அங்கேயே தேங்கியுள்ளபோது ஏற்படும் இழப்பிற்கு  தொழிலாளர்களை  பொறுப்பு ஏற்க செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும், அமைச்சர், ஆளும் கட்சி என்ற பெயரில் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்று வரும் வசூலைத் தடுத்து நிறுத்திட வேண்டும்,

கொள்முதலுக்கு தேவையான சாக்குகளை  காலத்தில் கொள்முதல் செய்யமாமல் கூட்டுறவு துறையிலிருந்து வாங்கும் சாக்குகளில்  தர வேறுபாடு அதிகம்  உள்ளத் தொகையை கொள்முதல் நிலைய பணியாளர் மீது திணிக்க கூடாது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச தலைவர் நக்கிரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தொமுசவை சேர்ந்த பேச்சுமுது, ஐ.என்.டி.யூ.சி. இளவரி, ஏ.ஐ.டி.யூ.சி. சந்திரசேகரன், பாட்டாளி தொழிற்சங்க மாறன், தொ.மு.க. மண்ட செயலாளர் தம்பிதுரை, துணைச் செயலாளர் சுப்புரத்தினம், பொருளாளர் இளமாறன், மாநில துணை பொதுச் செயலாளர் ராமதாஸ், மண்டல தலைவர் மகாலிங்கம் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Demonstrators ,Collector ,government procurement centers ,removal ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...