×

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்: 402 மனுக்கள் குவிந்தன

நாகை, மார்ச் 6: நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 402 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பெற்றது.
நாகை கலெக்டர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து 16 மனுக்களும்,  பொது மக்களிடம்  இருந்து 386 மனுக்கள் என 402 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் வேதாரண்யம் தகட்டூர் அரைக்கால் கரை பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவியும்,

மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு ரூ.1.63 லட்சம் மதிப்பிலான காதொலிக் கருவி உபகரணமும், தாட்கோ மூலம் சுய தொழில் செய்ய அரசு மானியத்துடன் வங்கிக் கடனுதவி ரூ.4.33 லட்சம் வழங்கப்பட்டது. கூட்டத்தில்  டிஆர்ஓ இந்துமதி, தனித்துணை கலெக்டர் வேலுமணி, மாற்று திறனாளி நல அலவலர் விக்டர்மரியஜோசப், பிஆர்ஓ செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...