×

போலி டாக்டர் கைது

பெரம்பூர், மார்ச் 6: சென்னை பெரம்பூர் படேல் சாலையில் “லட்சுமி” என்ற பெயரில் சித்தா கிளினிக் நடத்தி வந்தவர் அரவிந்த் சிக்தார் (40). இவர், ஆண்மை குறைவு, மூலநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவர், முறையான மருத்துவச்சான்று இல்லாமல் கிளினிக் நடத்துவதாக அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ கழகத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து இந்திய மருத்துவக்கழக அதிகாரி கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட கிளினிக்கில் நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது, முறையான சான்றிதழ் இல்லாமல் கிளினிக் நடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து செம்பியம் போலீசில் இந்திய மருத்துவக்கழக அதிகாரி கமலக்கண்ணன் புகார் செய்தார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த் சிக்தாரை கைது செய்தனர்.

Tags : doctor ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!