×

தென்னை உற்பத்தியாளர் சங்கத்தில் இலவச நுண்ணூட்ட உரம் விநியோகம்

குளச்சல், மார்ச் 6: குளச்சல் அருகே ரீத்தாபுரம் தென்னை உற்பத்தியாளர் சங்கத்தில் தென்னை விவசாயிகளுக்கு விலையில்லா  பேரூட்ட சத்து, நுண்ணூட்ட சத்து, பசுந்தாள் உரம் உள்பட 8 இடுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்னை உற்பத்தியாளர் சங்க தலைவர் தங்கமணி தலைமை வகித்து விநியோகத்தை துவக்கி வைத்தார். செயலாளர் மேரி ஸ்டெல்லா, பொருளாளர் தேவ சோபிதராஜ் , தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர் பாரதி பிரியன், தென்னை உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் முருகேசன், தென்னை உற்பத்தியாளர் தின இயக்குனர் சேர்மன் அப்துல் ரகுமான், தென்னை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் ஜாண்சேவியர், பவுராஜ், பத்ரோஸ், எடிசன் சுந்தர் ராஜ், ரெத்தினசுவாமி, சோபிதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : coconut manufacturer ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு