×

தக்கலை ஞானமாமேதை பீர்முகமது சாகிபு ஆண்டு விழா

தக்கலை, மார்ச் 6: தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஆண்டு விழா 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு 18 ஆயிரம் பாடல்களை இயற்றியவர் ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு. இவரது ஆண்டு விழா தக்கலை அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா முஸ்லிம் அசோஸியேஷன் சார்பில் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா முஸ்லிம் அசோஸியேஷன் நிர்வாகப் பொறுப்பு தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் தற்போது உள்ளது. இதன் நிர்வாக அதிகாரியாக வக்பு வாரிய கண்காணிப்பாளர் உமர் பாரூக்  நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆண்டு விழாவினை நடத்துவதற்காக தற்காலிக குழு ஒன்றை வக்பு வாரியம்  தேர்வு செய்துள்ளது   8ம் தேதி இரவு 9 மணிக்கு கொடியேற்றப்பட்டு நேர்ச்சை வழங்கப்படுகிறது.

பின்னர் 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை மார்க்கப் பேருரை நிகழ்ச்சி இரவு நடைபெறுகிறது. 21ம் தேதி இரவு 9 மணிக்கு ஞானப்புகழ்ச்சி பாடுதல் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடைபெறும். 22ம் தேதி மாலை நேர்ச்சை வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை வக்பு வாரியம் தேர்வு செய்துள்ள விழா கமிட்டியை சேர்ந்த பி.எம்.அப்துல் கபூர், எம். அபூ ஹனிபா, எம்.சிராஜுதீன், எம். ஹஸனார், அப்துல் அஸீஸ், எஸ். ஜஹபர் சாதிக், முஹம்மது சலீம், எம்.பி.எப்.மாஹீன், ஷேக் பரித் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags : Tirukalai Vishnamaathe ,festival ,Siraj ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...