×

மண்டைக்காடு கோயில் மாசிக்கொடை பகவதியம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி

குளச்சல், மார்ச் 6:  மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா கடந்த 3ம் தேதி காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு திடலில் ஆன்மீக பேருரை நிகழ்ச்சிகள், பக்தி பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 3ம் நாள் கொடையை முன்னிட்டு நேற்று காலை நடை திறப்பு, தொடர்ந்து பஞ்சாபிஷேகம், உஷபூஜை, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், மதியம் உச்ச பூஜை ஆகியவை நடந்தது. நேற்று பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. கேரள மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

இதனால் கடற்கரை, மண்டைக்காடு சந்திப்பு, கோயில் வளாகம், பொங்கலிடும் பகுதி ஆகிய இடங்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மாலையில் கீழ்கரை பிடாகை சடையப்பர் தர்ம சாஸ்தா கோயிலிலிருந்து யானை மீது களபம் மற்றும் சந்தனக்குடம் பவனி மண்டைக்காடு வந்தடைந்தது. இரவில் கதகளி மற்றும் அத்தாழ பூஜை, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடந்தது.

A 7.30 லட்சம் காணிக்கை வசூல்
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிக்கொடையை முன்னிட்டு கோயிலில் வைக்கப்பட்டுள்ள 16 உண்டியல்கள் தவிர கடந்த 20 நாட்களுக்கு முன்பு  மேலும் ஒரு வார்ப்பு உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இந்த வார்ப்பு உண்டியல் மட்டும் நேற்று  எண்ணப்பட்டது. திருக்கோயில் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், முதுநிலை கணக்கர் இங்கர்சால், காண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஆய்வாளர் கோபாலன், காரியம் ஆறுமுகதரன், குழித்துறை தேவிகுமாரி மகளிர் கல்லூரி மாணவிகள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆகியோர்  உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். எண்ணிக்கை முடிவில் ரூ7 லட்சத்து 29 ஆயிரத்து 177 மற்றும் 8 கிராம் தங்கம், 20.900 கிராம் வெள்ளி ஆகியவை வசூலானது.

Tags : Mantikadai Bhagavathi Amman ,
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...