×

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, மார்ச் 1: தர்மபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் நேற்று  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கரூரான் தலைமை வகித்தார். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதியுதவி ₹2 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ₹2 ஆயிரம் வழங்குவதில், மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு கூடுதலாக 25 சதவீதமாக வழங்க வேண்டும்.
தமிழக அரசு அமல்படுத்தியுள்ள மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர், பொங்கல் நிதி போன்ற திட்டங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு விரோதமாக செயல்படுவதை தவிர்க்க ேவண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாரியப்பன், முனியம்மாள், சீனிவாசன், வேடியப்பன், உதயகுமார், கவுரி, கிருஷ்ணன், திம்மன், செட்டியப்பன், சண்முகம், சரஸ்வதி, இடும்பன், வெங்கடாஜலம், சுசீலா, சென்னமூர்த்தி, சின்னமாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstrators ,
× RELATED புகுஷிமா அணு உலை விபத்து: ஜப்பான்...