×

திருச்சி மாவட்டத்தில் 32,654 மாணவ, மாணவிகள் பிளஸ்2 தேர்வு எழுதுகின்றனர்

திருச்சி, மார்ச்1: திருச்சி மாவட்டத்தில் 32,654 மாணவ, மாணவிகள் இன்று பிளஸ்2 தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 1) தொடங்கி 19ம் தேதி வரை நிறைவடைகிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் 247 பள்ளிகளைச் சேர்ந்த 14,950 மாணவர்களும், 17,704 மாணவியர்களும் என மொத்தம் 32,654 பேர் இத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 6ம் தேதி துவங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை 14,824 மாணவர்களும், 14,687 மாணவியர்களும் என மொத்தம் 31,561 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வுக்களுக்கான வினாத்தாள்கள் 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி துவங்கி மார்ச் 29ம் தேதி முடிவடைகிறது.

இத்தேர்வை 441 பள்ளிகளை சேர்ந்த 18,061 மாணவர்களும், 17,911 மாணவியர்களும் என மொத்தம் 35,972 பேர் எழுகின்றனர். 159 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் தலைமையில் தேர்வு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வையொட்டி கலெக்டர் சிவராசு, சிஇஓ ராமகிருட்டினன் உள்ளிட்டோர் தேர்வு மையங்களை பார்வையிடுகின்றனர்.

Tags : district ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை