×

பயனற்று கிடக்கும் தீத்தடுப்பு மையம்

உடுமலை,மார்ச் 1:உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் சின்னாறு செக்போஸ்ட் உள்ளது. இங்கு தமிழக வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் செலவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீத்தடுப்பு மையம் கட்டப்பட்டது.இங்கு வன ஊழியர்கள் 10 பேர் தங்கி இருந்து சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். வன ஊழியர்களுக்கான பயிற்சி முகாமும் இங்கு நடத்தப்பட்டது.இரவிலும் இங்கு தங்கும் ஊழியர்கள் வயர்லெஸ் மூலம் தீ தொடர்பான தகவலை பரிமாறி வந்தனர். இதன்மூலம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதியாக இருந்தது.

ஆனால் கட்டிடம் திறந்து 2 ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டது. அதன்பிறகு இங்கு ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் கட்டிடம் வெறுமனே கிடக்கிறது.தற்போது, கோடை வெயில் கொளுத்த துவங்கி உள்ளதால் ஆங்காங்கே வனப்பகுதிகளில் தீப்பற்றிக்கொள்கிறது. முதுமலை உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவில் தீப்பற்றி உள்ளது.உடுமலை, அமராவதி வனச்சரகங்களிலும் தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. ஆனால் இதை கண்காணித்து தடுக்கவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.எனவே, தீத்தடுப்பு மையத்தில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED உடுமலை அருகே திடீர் சாலை மறியல்