×

கீழப்பழூர் அருகே அரசு பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள்

அரியலூர், மார்ச் 1: அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்து வரும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல போதுமான பேருந்து வசதியில்லை. இதனால் எப்போதாவது அந்த வழியாக வரும் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியவாறும், பேருந்து மேற்கூரையின் மீது ஏறி பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வழியாக அதிகளவில் பேருந்துகளை இயக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு மாணவர்கள், அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகளவில் பேருந்து இயக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: கல்லூரி சாலை வழியாக வரும் ஒரு சில பேருந்துகளில் ஏறி சென்றால் தான் எங்களது ஊருக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியும். எனவே கல்லூரி வழியாக அதிகளவில் பேருந்துகளை இயக்க ேவண்டும். மேலும்  அரசு பாலிடெக்னிக்கில்  பேருந்து வசதிகளை ஏற்படுத்தி  கொடுத்தால் பாலிடெக்னிக் மாணவர்கள்  பயனடைவர் என்றனர்.

Tags : Polytechnic students ,Subelur ,
× RELATED இமயம் பாலிடெக்னிக் மாணவர்கள் 65 பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவு