×

தாசில்தார்கள் இடம் மாற்றம் கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மார்ச் 1:  நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தாசில்தார்களும் வெளி மாவட்டத்திற்கு பணிமாற்ற செய்யப்படுவதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று (1ம்தேதி) உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படுமென அறிவித்துள்ளனர். நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தமிழக அளவில் 270 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 4 தாலுகா அலுவலகங்களில் பணிபுரிந்த பாரதிவளவன், ஷாஜஹான், கவிதா, சித்ரா ஆகிய 4 ரெகுலர் தாசில்தார்களும் அரியலூர் மாவட்டத்திற்கு கடந்த 27ம்தேதியே பணிமாற்றம் செய்யப்பட்டனர். அரசின் இச்செயலைக் கண்டித்தும், கைவிடக் கோரியும் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாரதிவளவன் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் சரவணன், செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய செயற்குழு உறுப்பினர் குமரிஆனந்தன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். இதில் மத்திய செயற்குழு உறுப்பினர் அருளானந்தம், மாவட்ட பொருளாளர் சிவா, தாசில்தார்கள் சித்ரா, கவிதா, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த அனிதா, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் 1ம்தேதி இன்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது, 2,3 தேதிகளில் அலுவலகத்திற்குச் செல்லாமல் தேர்தல் பணிகள் உள்ளிட்ட வேறெந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது என வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags : Revenue Officer ,Association ,location ,Tashildar ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசு...