×

தேசிய கருத்தரங்கு

திருவில்லிபுத்தூர், மார்ச் 1: திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பார்மசி கல்லூரியும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகமும் இணைந்து மருந்து வடிவமைப்பு உருவாக்கத்தில் காப்புரிமைகளின் விளைவு என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கலசலிங்கம் பல்கலை துணைத்தலைவர் சசிஆனந்த் தலைமை வகித்தார். மதுரை மருத்துவ கல்லூரி முன்னாள் டீன் டாக்டர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். பார்மசி கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கொல்கத்தா தேசிய மருந்தாக்கியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி முருகன், மைசூர் ஜேஎஸ்எஸ் ஆராய்ச்சி அகாடமியை சேர்ந்த சங்கர் மற்றும் பெங்களூர் மைலான் ஆய்வக இயக்குனர் கிரிதாராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் பேசினர். கருத்தரங்கில் கலசலிங்கம் பார்மசி கல்லூரியும், கொல்கத்தா தேசிய மருந்தாக்கியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், மருந்தியல்துறை ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. கருத்தரங்கில் கேரளா மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். பேராசிரியர் ராம்பிரசாத் நன்றி கூறினார்.

Tags : Seminar ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்