×

மயான கொள்ளை விழாவுக்கு ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது

திண்டிவனம், மார்ச் 1:  மயான கொள்ளை திருவிழாவுக்கு இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட  ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது என சார் ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 6ம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் மயான கொள்ளையை முன்னிட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில், முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். இதில் வரும் 11ம் தேதி முத்து ரத திருவிழாவும் நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக மாரி செட்டி குளம் அருகே உள்ள மயானத்தை சுத்தம் செய்து தர நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் அருகில் உள்ள இடத்தையும், வெள்ளவாரி வாய்க்காலையும் நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து தரவேண்டும்.
மயானக் கொள்ளையின் போது நகராட்சி சார்பில் ஏழு இடங்களில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மார்ச் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை விழா நிகழ்ச்சியின் போது இடையூறு இன்றி சேவை வழங்கிட மின்சாரத்
துறை மற்றும் தொலைத்தொடர்பு துறையினர் ஏற்பாடு செய்து தரவேண்டும்.

ஊர்வலம் செல்லும் பாதையில் காவேரிபாக்கம் ரயில்வே கேட், ஈஸ்வரன் கோயில் ஆகிய இடங்களில் மேடு பள்ளங்களை சரி செய்து தரவேண்டும். இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட எந்தவிதமான சூலம், வேல், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது. அட்டையிலான பொருட்களை எடுத்து வர வேண்டும். ஊர்வலத்தில் சாமி ஆடும் போது உடன் வருபவர்கள் கண்ணாடி மற்றும் கட்சி கொடிகளை கொண்டு செல்லக்கூடாது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்லும்போது அவசர வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வேண்டும் என்பது உள்பட 22 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திண்டிவனம் வட்டாட்சியர் பிரபு வெங்கடேஸ்வரன், திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளர் சீனிபாபு, ரோஷணை காவல் நிலைய ஆய்வாளர் ஆண்டவர், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சூர்யா, மின்சாரத்துறை இளமின் பொறியாளர் இளவரசன், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜெயபாலன், திண்டிவனம் ஆர்ஐ செல்வகுமார் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags : cemetery robbery ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை