×

நாடாளுமன்ற தேர்தலில் நகரப்பகுதிகளில் சுவர் ஓவியம் வரைய அனுமதி கிடைக்குமா?

நெய்வேலி,  மார்ச் 1:  நெய்வேலியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி நகரப்பகுதிகளில் சுவர் ஓவியம் வரைய அனுமதி அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தடையை தகர்க்கும் என்ற எதிர்பார்ப்பில் ஓவியக் கலைஞர்கள் காத்திருக்கின்றனர்.   கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பல்வேறு தரப்பினருக்கும் மறைமுகமாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக சுவர் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மார்ச் முதல் வாரத்தில் 17வது மக்களவைக்கான தேர்தல் தேதி வெளியாக உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் பதவி ஏற்பு விழா நடைபெறும் மே மாதம் வரை தேர்தல் பணிகள் களைகட்டும்.

மேடை கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், ஒலிபெருக்கி நிறுவனத்தினர், வாடகை வாகனங்கள், திருமண மண்டபங்கள், அரங்குகள் வைத்திருப்பவர்கள், அச்சகம், கட்சிக்கொடி தயாரிப்பவர்கள்,  தனியார் புகைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் மறைமுக வேலை வாய்ப்பை பெறுவார்கள். இந்நிலையில் தங்களுக்கு  இடம் கிடைக்குமா  என்ற ஏக்கம் ஓவியக் கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுத் தேர்தல் என்றாலே ஓவியர்கள் தான். தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு பிறகு ஓவியர்களுக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. தற்போது கணினி விளம்பர பேனர்கள் வந்த பிறகு இவர்களது வாய்ப்பு மேலும் குறைய தொடங்கியது. இந்நிலையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஓவியக் கலைஞர்கள் உள்ளனர்.

Tags : areas ,elections ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...