×

நத்தம் பெருமாள் கோயிலில் மாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வைகுண்டம், மார்ச் 1:  வைகுண்டம் அடுத்த நத்தம் ஸ்ரீவிஜயாஸன பெருமாள் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ திருப்பதிகளில் 2ம் ஸ்தலமான நத்தம் ஸ்ரீவிஜயாஸன பெருமாள் கோயிலில், மாசி பிரமோற்சவ திருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9.30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் நிர்வாக அதிகாரி இசக்கியப்பன், ஆய்வாளர் முருகன், ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, வாசன், வேணுகோபால், அர்ச்சகர்கள் கண்ணன், ராஜகோபால் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து திருவிழாவில் தினமும் காலை 9 மணிக்கு பெருமாள் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு, இரவு 7.30 மணிக்கு ஹம்ச வாகனம், சிம்ஹ வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனங்களில் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. 4ம் தேதி இரவு 7.30 மணிக்கு சுவாமி எம்இடர்கடிவான் கருட வாகனத்தில் திருவீதி உலா வருதலும், 11ம் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீவரகுணமங்கை கைங்கர்ய சபா சார்பில் புஷ்பயாகமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Mass ,Natham Perumal ,
× RELATED தென்காசியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்