×

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி ரத்தினவேல் எம்பி வழங்கினார்

மண்ணச்சநல்லூர், பிப்.28: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளையொட்டி திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மண்ணச்சநல்லூரில் பொதுக்கூட்டம், வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் துரை.சக்திவேல் தலைமை வகித்தார். சணமங்களம் ஊராட்சி செயலாளர் கே.ஆர்.டி.ராமமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டி.ரத்தினவேல் எம்.பி., பொதுமக்களுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பேசினார். இதில் அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் டி.ஜான்மகேந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் டி.டி.கிருஷ்ணன், ஒன்றிய அதிமுக செயலாளர் டி.ஜெயக்குமார், ஒன்றிய பாசறை செயலாளர் ரமேஷ், திருப்பைஞ்சீலி கூட்டுறவு சங்கத்தலைவர் அறிவழகன், ஒன்றிய பொருளாளர் நடராஜன், முன்னாள் வார்டு கவுன்சிலர் நாகமணி, பேரூராட்சி பாசறை செயலாளர் ரவி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் நன்றி கூறினார்.

Tags : birthday party ,Jayalalithaa ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...