×

மண்ணச்சநல்லூர் அண்ணாமலைநகரில் டிரான்ஸ்பார்மர் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

மண்ணச்சநல்லூர், பிப்.28:  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது அண்ணாமலை நகர் பகுதி. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குறைவான மின் அழுத்தம் இருந்து வருவதால் புதிதாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறைவான மின் அழுத்தம் காரணமாக இரவு நேரங்களில் மின் விளக்குகள் மின்விசிறிகள் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் இயக்கம் பாதிக்கப்பட்டது. மின்னழுத்தம் குறைபாடு காரணமாக மின்சாதன பொருட்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை எற்று மின் வாரிய அதிகாரிகள் கடந்த ஆண்டு இப்பகுதியில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மின்மாற்றி அமைப்பதற்கு கம்பங்களை நட்டு வைத்தனர்.

ஆனால் டிரான்ஸ்பார்மருக்கு முக்கியமாக உள்ள மின்மாற்றி பெட்டி இன்னும் வைக்கப்படவில்லை. பணிகள் ஆரம்பித்து ஒரு ஆண்டு காலம் ஆகியும் இன்னும் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Annamalai Nagar ,
× RELATED அந்நிய பொருட்களை விற்க கூடாது: த.வெள்ளையன் வேண்டுகோள்