×

விரிவுரையாளர் பணியிடத்தை நிரப்ப கோரி முதல்வரிடம் மனு

திருக்கனூர், பிப். 27: திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிபாளையத்தில் புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்து சொந்தமான பாண்கோஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக நூறு சதவீதம் தேர்ச்சியை அளித்து வருகிறது. இங்கு பெரும்பாலான கரும்பு விவசாயிகளின் பிள்ளைகள் குறைந்த கட்டணத்தில் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆலைக்கு கரும்பு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.21 கோடி உள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் தங்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் அப்பள்ளியில் 3 விரிவுரையாளர் (தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம்) பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி பாண்கோஸ் பள்ளி ஆசிரியாகள் மற்றும் ஊழியர்கள் நேற்று சட்டசபையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து மனுஅளித்தனர்.  அதில், புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையால் நடத்தப்பட்டு வரும் பாண்கோஸ் பள்ளியில் உள்ள 3 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்கள் கல்வி கற்ற முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக, அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை குறையும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. எனவே, காலியாக உள்ள 3 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : petitioner ,
× RELATED வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே...