×

பேருந்து நிலையத்தில் கட்டணமில்லா கழிப்பிடம் அைமக்க பயணிகள், வணிகர்கள் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில், பிப். 28:  காட்டுமன்னார்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்துநிலையத்தில் கட்டணமில்லாத சிறுநீர் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பேருந்துநிலையத்தில் நாளொன்றிற்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்வதால் இந்த பேருந்து நிலையம் எப்போதும், பரபரப்புடன் காணப்படும். பயணிகளுக்கென கட்டண கழிப்பிடம் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் அதனை பயன்படுத்துவதில்லை. மேலும் பேருந்தில் பயணம் செய்து வந்த அவசரத்தில் கட்டண கழிப்பிடத்தை கண்டுகொள்ளாமல் பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் சிலர் என அனைவரும் பேருந்துநிலையத்தில் உள்ள திறந்தவெளிகளிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். சிலர் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்லும் நேரத்திலும் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அவர்கள் சங்கடமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  பேரூராட்சி ஊழியர்கள் தினந்தோறும் குளோரிங் தெளித்து சுத்தப்படுத்தினாலும் இங்கிருந்து வரும் துர்நாற்றம் பேருந்துநிலையம் முழுவதும் வீசுகிறது. மேலும் அப்பகுதியை கடக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் முகம் சுளித்தப்படி மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை நீடிக்கிறது.  இதனை சரிசெய்யும் விதமாக தமிழக அரசின் சார்பில் பேரூராட்சி நிர்வாகம், கட்டணமில்லாத சிறுநீர் கழிப்பிடத்தை ஏற்படுத்தித்தர வேண்டும். மேலும் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து நிலையத்தின் வளாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Travelers ,bus stand ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி