×

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் குறைவாக இயக்கப்படும் பஸ்களால் மாணவர்கள் பொதுமக்கள் கடும் அவதி

கூடுவாஞ்சேரி, பிப்.28: வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் குறைவாக இயக்கப்படும் பஸ்களால் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி சென்னை - திருப்போரூர் சாலையில் இணையும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை 18 கிமீ தூரம் கொண்டது. நான்கு வழிச் சாலை, கடந்த 2012ம் ஆண்டு ₹40 கோடியில் மதிப்பில் அமைக்கப்பட்டது. இந்த சாலையோரத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் குறைவாக இயக்கப்படும் பஸ்களால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னை, பல்லாவரம், தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா, கேளம்பாக்கம் வழியாக கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம் உள்பட பல பகுதிகளுக்கு குறைந்த அளவில் மாநகர பஸ்கள், அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தனியார்மற்றும் அரசு ஊழியர்கள் பஸ்சுக்காக மணி கணக்கில் காத்து கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ்கள் வராததால், வேன் மற்றும் ஆட்டோக்களில் அதிக பணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தாமதமாக வரும் பஸ்கள், பள்ளி மாணவர்களை பார்த்ததும் நிற்காமல் செல்கின்றன.  இதனால் வேறு வழியில்லாமல் ஆட்டோ மற்றும் வேன்களில் மாணவர்கள் பணம் கொடுத்து செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பஸ்களில் கூட்ட நெரிசலில் ஏற முடியாதவர்கள், படிகட்டில் தொங்கி கொண்டே ஆபத்தான முறையில் வெகுதூரம் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் ெபாதுமக்கள், பயணம் செய்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்க எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே போக்குவரத்து துறை உயரதிகாரிகள், இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags : Vandalur-Kolambakkam Road ,
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்