கொங்குநாடு கல்வி நிறுவனங்களில் 12வது ஆண்டு விழா கொண்டாட்டம்

நாமக்கல், பிப்.28:தொட்டியம் கொங்குநாடு கல்வி நிறுவனங்களில் கல்லூரி 12வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கொங்குநாடு கல்வியியல் கல்லூரிகளில் நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களாக ஐபிஆர்சி மற்றும் இஸ்ரோ துணை பொது மேலாளர் சுதர்சன், நாமக்கல் இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் தாமோதரன், இஸ்ரோ அறிவியல் ஆராய்ச்சியாளர் பழனியப்பன் கலந்து கொண்டனர். கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பிஎஸ்கே பெரியசாமி தலைமை உரையாற்றினார். பொருளாளர் பிஎஸ்கே தென்னரசு வரவேற்று பேசினார். செயலாளர் கட்டிட பொறியாளர் பிஎஸ்கே தங்கவேலு வாழ்த்துரை வழங்கினார்.

கல்வி நிறுவன இணை செயலாளர் பிஎஸ்கே அசோக்குமார் நன்றி கூறினார். விழாவில், ஆண்டறிக்கைகளை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அய்யாதுரை மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார் வாசித்தனர். 3 கல்லூரிகளைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு தங்க காசுகள், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

Related Stories:

>