×

பிஎம்சி டெக் கல்வி நிறுவனங்களில் இலவச கண் சிகிச்சை முகாம்

வேப்பனஹள்ளி, பிப்.28:  வேப்பனஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிஎம்சி டெக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனங்கள் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு, பிஎம்சி டெக் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பெருமாள் தலைமை வகித்தார். இயக்குனர் சுதாகர் முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் அசோக், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயராமன்,

முன்னாள் கவுன்சிலர் கலீல் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கண் பரிசோதனை செய்து பயன் அடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், ராஜேஷ், வெங்கடேஷ்குமார், ஷாஹிதுல்லா, பர்கத்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Camp ,BMC Tech Educational Institutions ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு