×

திட்டங்களை தெரிந்துகொள்வோம் பைண்டிங், பேப்பர்பிளேட் செய்ய கதர் மூலம் கடனுதவி

மத்தியஅரசின் கதர்கிராமத் தொழில்கள் ஆணையம்(கேவிஐசி) சார்பில் வனம் சார்ந்த தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. இதன்படி கைக்காகிதம், பசை, பிசின் தயாரித்தல், அரக்கு தயாரித்தல், தீப்பெட்டி, அகர்பத்தி மற்றும் பட்டாசு, மூங்கில் மற்றும் கூடை, காகிதத்தினால் செய்யப்படும் தட்டு, கிண்ணம், பை மற்றும் பெட்டிகள், புத்தக பைண்டிங், கவர் நோட்புக் செய்தல், விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல், வனவிளைபொருட்கள் சேகரித்தல், பதனிடுதல், போட்டோபிரேம், சணற்பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: கிராம கைவினைஞர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், பதிவு பெற்ற நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், டிரஸ்ட் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக்குழு போன்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் இத்திட்டத்தின்கீழ் 10 சதவீதம் சுயமாக முதலீடு செய்ய வேண்டும். பெண், எஸ்சி.எஸ்டி.ஓபிசி, நலிவடைந்த பிரிவினர் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும். இதே போல் பொதுப்பிரிவினர்க்கு 25 சதவீத மானியமும், மற்ற பிரிவினர்க்கு 30 சதவீதமும் வழங்கப்படும். தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ், தொழில் திட்ட அறிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தொடர்பு முகவரி: கதர்கிராம தொழில் ஆணையர், கோட்ட அலுவலகம், 10, புறவழிச்சாலை, காளவாசல், மதுரை-10 என்ற முகவரிக்கு நேரிலோ (0452) 2386792 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

Tags : khadir ,
× RELATED ரமலான் நோன்பு கஞ்சியை...