×

தேர்வு எழுத அனுமதி மறுப்பு பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் சாலை மறியல்

ராஜபாளையம், பிப். 28: தேர்வு எழுத மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராஜபாளையம் அருகே, அரசு பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள், அவரது பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஒரு தரப்பு மாணவிகளை, மற்றொரு தரப்பு மாணவிகள் தொடர்ந்து அவதூறாக பேசுவதாக கூறப்படுகிறது. இது குறித்து வகுப்பாசிரியர், தலைமையாசிரியரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளியில் தேர்வு நடந்தபோது, ஒரு தரப்பு மாணவியர், மற்றொரு தரப்பை சேர்ந்த 7 மாணவிகளை தாக்கினர். இதில், அவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகள் 7 பேரை, தேர்வு எழுதவிடாமல் பள்ளி நிர்வாகத்தினர் வெளியேற்றினர். வீட்டிற்கு சென்ற மாணவிகள், நடந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த 7 மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அந்த தரப்பை சேர்ந்த மாணவிகள் பள்ளி நிர்வாகத்ைத கண்டித்து நேற்று காலை பள்ளி முன்பு மதுரை-தென்காசி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சேத்தூர் போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து ெசன்றனர். இந்த சம்பவத்தால் மதுரை-தென்காசி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Dismissal ,school ,school administration ,road ,girls ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி