×

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுற்றுச்சுவர் சேதமானதால் விளையாட்டு வீரர்கள் அவதி சீரமைக்க கோரிக்கை

அரியலூர்,பிப்.28: அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கின் சுற்றுச்சுவர் சேதமாகி உள்ளதால் விளையாட்டு வீரர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூரில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுற்றுச் சுவர் இடிந்து பல வருடங்களாக உள்ளன. இவ் விளையாட்டு மைதானம் அருகில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.  இம் மைதானத்தில் ஹாக்கி, கால்பந்து, மைதானங்கள் உள்ளன. இவ் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்கள் விடுதியும் அமைந்துள்ளன. இம் மைதானத்தில் சுற்றுச் சுவர் மூன்று பக்கங்களில் இடிந்து சேதமாகி உள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ள  ஆடு மற்றும் மாடுகள் மைதானத்தில் வந்து ஹாக்கி மற்றும் கால் பந்து மைதானத்தில் வந்து செல்கிறது, இதனால் மைதானம்  அசுத்தம் ஆகிறது. விளையாட்டு வீரர்கள் காலையில் வந்து பார்த்தால் மைதானம் அசுத்தமாக இருப்பதால் அவற்றை சுத்தம் செய்துவிட்டு அதன்பிறகு தான் விளையாடி வருகின்றனர்.

இதனால் விளையாட்டு வீரர்கள் மனதளவில் பெரும் மனஉளச்சலில் உள்ளனர். அது மட்டும் அல்லாமல் அருகில் அரசு கல்லூரி இருப்பதால் அங்குள்ள மாணவ, மாணவிகள்   மைதானத்தில் மதிய உணவுகளை அருந்திவிட்டு அப்படியே அசுத்தம் செய்கின்றனர். மேலும் மாணவ, மாணவிகள் மைதானத்தில் உள்ள அமர்நது கொள்வது போன்ற செயல்கள் ஈடுபடுகின்றனர். மைதானத்தில் பொதுமக்கள் காலை மற்றும் மாலை வாக்கிங் செல்பவர்களுக்கு இளைப்பாற ஒரு பெஞ்ச் கூட கிடையாது. இதனால் வயது முதிர்ந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் மாவட்ட நிர்வாகம் வயது முதிர்ந்தவர்களுக்கு பெஞ்ச் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைத்துதர வேண்டும் என்றும் மைதானத்தில் சுற்றுசுவர் அமைத்து ஆடு,மாடுகள் உள்ளே வராமல் இருக்கவும், கல்லூரி மாணவ, மாணவிகள் இங்கே வராமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது
மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Ariyalur District Sports Stadium ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது