×

8ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு முகாம்

மதுரை, பிப்.28: மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வகையில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9 மணியளவில் கப்பலூரில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் நடக்கிறது. முகாமில் 80க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆயிரக்கணக்கான காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியியல், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் நர்சிங் போன்ற படிப்புகளை முடித்திருப்பவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் அளிக்கப்படும் கட்டணமில்லா குறுகிய கால திறன் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் எஸ்சிவிடி மற்றும் செக்டார் ஸ்கில் கவுன்சில் சான்றிதழ்களோடு, தனியார் நிறுவனங்களில் பணிநியமனமும் பெற்று வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகளில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : Employment Camp ,graders ,
× RELATED சிறுகதை