திருத்துறைப்பூண்டி வேளூர் பாலம் அருகே ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் தீயிட்டு அழிப்பு

திருத்துறைப்பூண்டி, பிப். 28: திருத்துறைப்பூண்டி வேளூர் பாலம் அருகில்  ஆற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் தினகரன் செய்தி எதிரொலியால் தீயிட்டு அழிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் அடப்பாற்றில் வேளூர் பாலம் அருகில் ஆற்றில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் செல்லும் பொதுமக்கள் மீதும் விழுகிறது.வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வேளூர் பாலம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் கொட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை குறித்து கடந்த 26ம்  தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தோம். விசாரணையில் இந்த குப்பைகள் வேளூர் ஊராட்சியில் தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை இங்கு கொட்டப்பட்டு வந்தது, இதையடுத்து அதை தீயிட்டு அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதனை தொடர்ந்து தீயிட்டு அழிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று இனிமேலும் ஆற்றில் குப்பைகளை கொட்டாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : river ,Tiruthuraipondi Velur Bridge ,
× RELATED ஆப்ரிக்கன் கெழுத்தி மீன் வளர்ப்பு குட்டைகள் அழிப்பு