×

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்துநிலைய வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, பிப்.28: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய  வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து  நிலைய வளாகத்தில்  உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையால் வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக அரசு  டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட நுகர்வோர் மையம், வர்த்தகர் சங்கம் சார்பில் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை  கண்டித்து நேற்று புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நுகர்வோர் மையநிறுவனர் பாசு மணிதலைமைவகித்தார்.மாவட்டதலைவர் நாகராஜன் முன்னிலைவகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி டாக்டர் ராஜா, வர்த்தகர் சங்கதலைவர் செந்தில்குமார், முன்னாள்தலைவர் செந்தில்நாதன், செயற்குழு உறுப்பினர் தமிழ்பால் சிவகுமார் ஆகியோர் பேசினர்.இதில் வர்த்தகர் சங்கநிர்வாகிகள், வணிகர்கள், சேவைசங்கநிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,shop ,Tasmagm ,bus stand premises ,
× RELATED லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஜூஸ் கடை ஊழியர் பலி