×

கோட்டூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சென்றால் அதிகாரிகள் அலட்சியம் பெண்கள் குற்றச்சாட்டு

மன்னார்குடி, பிப். 28: கோட்டூரில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் இலவச வீட்டுமனை கேட்டு செல்லும் மக்களிடம் அதிகாரிகள் பதிலளிக்காமல் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர் என பெண்கள் குற்றஞ்சாட்டினர். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூரில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தை எம்எல்ஏ ஆடலரசன் துவக்கி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் வடக்கு ஒன்றி யத்தில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் கோட்டூர், புழுதிக்குடி, கருப்பு கிளார், திருக்களர், வெங்காத்தான்குடி, ஆகிய 5 ஊராட்சிகளில் நேற்று நடை பெற்றது.  இதன் துவக்க விழா கோட்டூரில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு எம்எல்ஏ ஆடலரசன் தலைமை வகித்தார்.  கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலஞானவேல் வரவேற்றார். மாநில விவசாய அணி அமைப்பாளரும் முன்னாள் எம்பியுமான ஏகேஎஸ் விஜயன், கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் பங்கேற்று பல ஆண்டுகளாக குடியிருக்கும் இடங்களுக்கு  இலவச வீட்டு மனை பட்டா கேட்டு செல்லும் தங்களை பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடிக்கும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு, கஜா புயல் நிவாரண முறைகேடுகள், முதியோர் தொகை இழுத்தடிப்பு, குடிநீர் உள்ளிட்ட  அடிப் படை வசதிகளை செய்து தருவதில் மெத்தனப்போக்கை கடைபிடிக்கும் அதிகாரிகள், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு குறைகளை குறி அதற்கு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரினர்.பொது மக்கள் கூறிய குறைகளை கேட்டறிந்த பின்  எம்எல்ஏ ஆடலரசன் பேசுகையில்,மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுப்போம் என்றும், அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு தொடர்ந்தால் மக்கள் நலன் காக்க திமுக சார்பில் போராட் டங்களில் ஈடுபடுவோம் என்றார்.  இக்கூட்டத்தில்  ஆனந்தன், இளங்கோவன், மரியசூசை, முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

Tags : panchayat council meeting ,women ,DMK ,Kothore ,
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...