திட்டத்தை சரியாக செயல்படுத்தாத 2 நுண்ணீர் பாசன நிறுவன அங்கீகாரம் ரத்து

தஞ்சை, பிப். 28: திட்டத்தை சரியாக செயல்படுத்தாத 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யபட்டுள்ளதால் அந்த நிறுவனத்தை யாரும் அணுக வேண்டாம் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.பாசனநீரை சேமிக்க உதவும் நுண்ணீர் பாசன திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான வாட் வரியை தமிழக அரசே ஏற்று கொண்டுள்ளது.     

நுண்ணீர் பாசன திட்டத்துக்காக தஞ்சை மாவட்டத்துக்கு ரூ.6.13 கோடி ஒதுக்கீடு செய்து 1138 எக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் 41 நுண்ணீர் பாசன நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் எவர்கிரீன் இரிகேசன், பூர்மா பிளாஸ்ட் ஆகிய 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரத்தை தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை  ரத்து செய்துள்ளது.எனவே இந்த 2 நிறுவனங்களிடம் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் அணுக வேண்டாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.   

Related Stories: