×

பேரழிப்பு திட்டங்களை தடுக்ககோரி குடந்தை பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

கும்பகோணம், பிப். 28: பேரழிப்பு திட்டங்களை ரத்து செய்யக்கோரி கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.    அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்கசண்முகசுந்தரம் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ், வைரமூர்த்தி ஆகியோர் துண்டு பிரசுரம் வழங்கினர். அப்போது காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பெட்ரோ ரசாயன மண்டலத்தை ரத்து செய்ய வேண்டும்.    

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். மேகதாட்டு அணை கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும். சாகர்மாலா, அணல் மின், அணு உலை, நியூட்ரினோ திட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச பேரழிப்பு திட்டங்களின் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.    2017ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட  ரயில்வே கால அட்டவணையில் தாம்பரம்- செங்கோட்டை இடையே கும்பகோணம்  வழியாக  முற்றிலும் முன்பதிவற்ற  புதிய அந்த்யோதயா ரயில் இயக்கம் குறித்த தகவல்  வெளியிடப்பட்டது.   

Tags : public ,
× RELATED அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில்...