×

காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கல்விச்சீருடன் வந்து அசத்திய கிராமமக்கள் மேளம், தாளத்துடன் ஊர்வலம்

கந்தர்வகோட்டை, பிப்.28:  கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தேவையான உபகரணங்களை கிராம மக்கள் கல்விச் சீராக கொண்டு வந்து கொடுத்து அசத்தினர். கிராம பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை அப்பகுதி மக்கள் கல்விச் சீராக வழங்கிவரும் நிகழ்ச்சி இந்த வருடம் அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மக்கள் கல்விச்சீராக வழங்கி வருகின்றனர்.

இதே போல் கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிக்கு தேவையான வாட்டர்டேங்க், பீரோ, சேர், டேபிள், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் மற்றும் விளையாட்டு பொருட்களை மேளம் தாளம் முழங்கி ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளியில் கல்விச்சீரை சேர்த்தனர்.வட்டாரக் கல்வி அலுவலர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். தலைமையாசி ரியர் ராசாத்தி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வரவேற்றனர். கிராம த்தை சேர்ந்தவர்கள் பள்ளியில் பணம் செலுத்தி புரவலர்களாக தங்களை இணை த்துக் கொண்டனர்.

Tags : village panchayat ,educationist ,Karnataka State ,Panchayat Union School ,
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!