×

மரக்காணம் அருகே தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

மரக்காணம், பிப். 27: மரக்காணம் அருகே கழிக்குப்பம் அம்மச்சார் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(40). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் மரத்தில் ஏரி தேங்காய்களை பறித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மரம் ஏற பயன்படுத்தும் கயிறு அறுந்துவிட்டதால், நிலை தடுமாறி மரத்தில் இருந்து கீழே
விழுந்தார். இதில் மயங்கி சுய நினைவு இல்லாமல் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், மருத்துவ
மனைக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marakkanam ,
× RELATED பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் நெசவு...