மாட்டுவண்டி தொழிலாளர் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு

கடலூர், பிப். 27: கடலூர் அருகே உள்ள இரண்டாயிரம் விளாகம் கிராமத்தை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:இரண்டாயிரம் விளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மாட்டுவண்டி தொழிலை ஆதாரமாக கொண்டு 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
தற்போது மாட்டுவண்டி மணல் குவாரிகள் செயல்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடுகிறோம். எனவே மாட்டு வண்டி தொழிலாளர் குடும்பங்களை பாதுகாக்கும் பொருட்டு மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Tags : family members ,
× RELATED அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்தால்...