×

கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கல் தொடக்க விழா

மணப்பாறை, பிப்.27: மணப்பாறையில் வேளாண் துறை, வருவாய்த் துறை இணைந்து பிரதம மந்திரி சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகை ரூ.2000 வழங்கல் தொடக்க விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு எம்எல்ஏ சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், தாசில்தார் சித்ரா மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மணப்பாறை வேளாண் அலுவலர் மோகனா வரவேற்றார். வேளாண் உதவி இயக்குனர் முருகன் தலைமை வகித்து பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6000 என்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.

பின்னர் பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி சம்மான் நிதி திட்டம் தொடங்கி வைத்த நிகழ்வு காணொளி காட்சி மூலம் விவசாயிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதல் தவணை தொகையாக ரூ.2000 வழங்குவதற்கான சான்றிதழ்களை மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர் 50 விவசாயிகளுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் பேசுகையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் சிறப்பு முகாம் அந்தந்த விஏஓ அலுவலகங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று விவசாயிகள் பயனடைய கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Tags : ceremony ,Kisan Samman ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா