×

திருச்சி என்ஐடியில் மென்பொருள் ஹேக்கத்தான்-2019 போட்டி மார்ச் 2, 3ல் நடக்கிறது

திருச்சி, பிப்.27:  திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), பிரதமர் அலுவலகத்தின் நேரடி உதவியுடன், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் ‘ஸ்மார்ட் இந்தியா  ஹேக்கத்தான்-2019’ மென்பொருள் போட்டியை நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கும் இந்த ஹேக்கத்தானானது  உலகின் மிகப்பெரிய மென்பொருள் கண்டுபிடிப்புக்கான திறப்பு ஆகும். தொழில் நிறுவனங்களின் முக்கிய சவால்களுக்கு புதிய தீர்வுகாண, திறன்மிகு மாணவர்களுக்கு வழங்கப்படும் அரிய வாய்ப்பாக உள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் பங்கேற்பாளர்களின் வரவேற்பை பெற்ற இதன் இறுதி  பெரும் போட்டியானது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரால் தொடங்கி வைக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மாணவ போட்டியாளர்களுடன் நேரலைக் கலந்துரையாடலில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 1,300 குழுக்களாக இந்தியாவில் 48 மையங்களில் ஓய்வின்றி 36 மணி நேர  சவாலில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு இது தனியார் நிறுவனங்கள் உள்ளடக்கி உலகின் சிறந்த பல நிறுவனங்களின் சவால்களுக்குத் தீர்வளித்து வெல்ல அறியதொரு வாய்ப்பாகும்.

Tags : competition ,Trichy NID ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி