×

தலைமையாசிரியரை தாக்கிய வாலிபர்களை கைது செய்ய வலியுறுத்தி கொட்டையூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், பிப். 27: தலைமை ஆசிரியரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கொட்டையூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கொட்டையூரில் வள்ளலார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி சாலையோரம் அமைந்துள்ளது. மேலும் சாலையின் மறுபுறமும் பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை சாலையை கடந்து ஒரு மாணவி மற்றொரு வகுப்பறைக்கு சென்றார். அப்போது ஒரு வாலிபர், அந்த மாணவியிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பள்ளி ஆசிரியையிடம் மாணவி தெரிவித்தார். இதுகுறித்து கேட்டபோது ஆசிரியையை நண்பர்களுடன் சென்று வாலிபர் திட்டினார். இதை பார்த்து கேட்டபோது ஆசிரியர் தனராமன், பாதுகாவலர் முத்துக்குமரனை வாலிபர் தாக்கினார்.

மேலும் தலைமையாசிரியர் மனோகரனையும் தாக்கினர். இதில் மனோகரனின் மூக்கு உடைந்து படுகாயமடைந்த அவரை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் தலைமை ஆசிரியர், ஆசிரியரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், பள்ளி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வகுப்புகளை புறக்கணித்து வள்ளலார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த தகவல் கிடைத்ததும் தாசில்தார் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமையாசிரியரை தாக்கிய மேலக்கொட்டையூரை சேர்ந்த அப்பு (எ) சுந்தரமூர்த்தியை கைது செய்துள்ளோம். மேலும் வாலிபர்களை விரைவில் கைது செய்கிறோம் என்று உத்தரவாதம் அளித்தனர். அதன்பேரில் ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Tags : Teachers ,men ,Kottaiyur ,headmaster ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்