×

அம்பத்தூர் சோதனை சாவடியில் நின்று ‘கவனித்துவிட்டு’ செல்

அம்பத்தூர், பிப்.27:  சென்னை புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, கொலை, போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதனை தடுக்கும் வகையில் முக்கிய சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கை செய்வது வழக்கம்.  இந்நிலையில் அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை,  கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள  சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் அற்புதம், தலைமையில் ஒரு காவலர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அற்புதம்,  அந்தச் சாலையில் வரும் ஆறு, நான்கு சக்கர சரக்கு வாகனங்களை வழிமறித்து ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா ₹50 முதல் ₹100 ரூபாய் வரை கட்டாயம் தரவேண்டுமென மிரட்டி வசூலித்தனர். மேலும், அவர் முறையாக ஆவணங்கள் வைத்திருந்தாலும் வசூல் தான். அவர்களது வசூல் வேட்டையை சமூக ஆர்வலர் ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று முதல் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வைரல் வீடியோ உரையாடலை பார்த்து சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன ஓட்டிகள் முறையாக ஆவணங்களை கொண்டு வந்தாலும் போலீசார் வசூலிக்கின்றனர். ஒருசிலர் ஆவணங்கள் இல்லை என்று மெத்தனமாக கூறிவிட்டு போலீசாரிடம் பணத்தை கொடுத்துவிட்டு பறக்கின்றனர். இதனால், குற்றச்சம்பவங்கள் சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்கிறது. இதற்கு போலீசாரின் முறைகேடான வாகன தணிக்கையே காரணம். எனவே, சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் அடிக்கடி காவல் சோதனை சாவடிகளில் முறையாக ஆய்வு நடக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என்றனர்.

Tags : Ambattur ,checkpoint ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...