×

லஞ்சம் தலைவிரித்தாடுவதாக புகார் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் உயர் அதிகாரி அதிரடி சோதனை

தாம்பரம்: தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஆர்.டி.ஓ துரை, நிலை ஒன்று ஆய்வாளர் செல்வி, நிலை இரண்டு ஆய்வாளர் னிவாஸ் உட்பட அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்கென தனித்தனியாக புரோக்கர்களை வைத்துக் கொண்டு, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு வரும் பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இந்த அலுவலக  கட்டுப்பாட்டில் சுமார் 33 ஓட்டுநர் பயிற்சி மையங்கள் செயல்பட்டு  வருகின்றன. இதில் ஒரு சில ஓட்டுநர் பயிற்சி மையங்களை தவிர பெரும்பாலான ஓட்டுநர் பயிற்சி  மையங்கள் வீதிமீறி செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து தாம்பரம்  வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தி நேற்றைய தினகரன் நாளிதழில் வெளியானது.

இதனையடுத்து நேற்று காலை போக்குவரத்து இணை ஆணையர் மனகுமார், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு  திடீர் என வந்து ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, ஓட்டுநர் பயிற்சி மைய உரிமையாளர்கள், ‘‘பணம் கொடுத்தால் மட்டுமே முதல் நிலை ஆய்வாளர் செல்வி விண்ணப்பங்களில் கையெழுத்திடுகிறார். ஒரு குறிப்பிட்ட ஓட்டுநர் பயிற்சி மைய உரிமையாளரின் மகனுடன் சேர்ந்துகொண்டு பல்வேறு முறைகேடுகளை செய்துவருகிறார்,’’ என சரமாரியாக அவரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரிப்பதாக இணை ஆணையர் தெரிவித்தார். பின்னர், தொடர்ந்து இதுேபான்ற புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அங்கிருந்த ஊழியர்களை எச்சரித்துவிட்டு சென்றார்.

Tags : office ,RDO ,bidder ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...