×

பாராளுமன்ற தேர்தலையொட்டி வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் திருவட்டார், கிள்ளியூர் தாலுகாவுக்கு புதிய அலுவலர்கள்

நாகர்கோவில், பிப். 27:   குமரி மாவட்டத்தில் தாசில்தார், துணை தாசில்தார்கள் உட்பட 31 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே உத்தரவு பிறப்பித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தாலுகாக்களில் தேர்தல் பிரிவுகளில் புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களுக்கும் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தேர்தல் பிரிவு தாசில்தார்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே பிறப்பித்துள்ளார்.  அதன்படி விளவங்கோடு தாசில்தார் கோலப்பன், புதிதாக உருவாக்கப்பட்ட கிள்ளியூர் தாலுகா தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். பத்மநாபபுரம் கோட்ட ஆய அலுவலர் ராஜமனோகரன், கிள்ளியூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அகஸ்தீஸ்வரம் மண்டல துணை தாசில்தார் பாபு ரமேஷ், நாகர்கோவில் கோட்ட ஆய அலுவலராகவும், விளவங்கோடு மண்டல துணை தாசில்தார் இசபெல் வசந்தராணி விளவங்கோடு (முத்திரைத்தாள்) தனி தாசில் தாராகவும், விளவங்கோடு தனி தாசில்தாராக (முத்திரைத்தாள்) இருந்த ஜாய்சரோஜா, விளவங்கோடு தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், மாற்றப்பட்டுள்ளனர்.

விளவங்கோடு நிலமெடுப்பு தனி தாசில்தார் புரந்தரதாஸ், விளவங்கோடு தாலுகா தாசில் தாராக மாற்றப்பட்டுள்ளார். இதனை போன்று துணை தாசில்தார் நிலையில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் வினோத், அகஸ்தீஸ்வரம் மண்டல துணை தாசில்தாராகவும், நாகர்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு தலைமை உதவியாளர் ஜாண் ஹெனி, கல்குளம் மண்டல துணை தாசில்தாராகவும், கல்குளம் மண்டல துணை தாசில்தார் மேரி ஸ்டெல்லா, மாவட்ட தேர்தல் பிரிவு தனித்துணை தாசில் தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். விளவங்கோடு தேர்தல் தனித்துணை தாசில்தார் அனிதாகுமாரி, விளவங்கோடு தலைமையிடத்து துணை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். விளவங்கோடு தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜேஷ், விளவங்கோடு தேர்தல் தனித்துணை தாசில்தாராகவும், கல்குளம் மண்டல துணை தாசில்தார் கந்தசாமி, கல்குளம் தேர்தல் தனித்துணை தாசில்தாராகவும், துணை தாசில்தார் நாகேஸ்வரி, தோவாளை வட்ட வழங்கல் அலுவலராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக (எல் பிரிவு) தலைமை உதவியாளர் ஆறுமுகம், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக தேர்தல் தனித்துணை தாசில்தாராகவும், துணை தாசில்தார் அன்னபாய், கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

அகஸ்தீஸ்வரம் தேர்தல் தனி துணை தாசில்தார் பீனா, நாகர்கோவில் சப் கலெக்டரின் தலைமை உதவியாளராகவும், தோவாளை வட்ட வழங்கல் அலுவலர் வினைதீர்த்தான், தோவாளை தேர்தல் தனித்துணை தாசில்தாராகவும், கல்குளம் தேர்தல் தனித்துணை தாசில்தார் சரளகுமாரி, கல்குளம் வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கல்குளம் கூடுதல் துணை தாசில்தார் சுபா, கல்குளம் தலைமையிடத்து துணை தாசில் தாராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் தனித்துணை தாசில்தார் ரமணி, கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். தோவாளை தேர்தல் தனி துணை தாசில்தார் குமாரவேல், அகஸ்தீஸ்வரம் தேர்தல் தனித்துணை தாசில்தாராகவும், துணை தாசில்தார் சரஸ்வதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும், துணை தாசில்தார் தேர்தல் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலக தலைமை உதவியாளராகவும், துணை தாசில்தார் விஜயகுமாரி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

விளவங்கோடு மண்டல துணை தாசில்தார் மரகதவல்லி திருவட்டார் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், துணை தாசில்தார் மேத்யூ ஜெயஜோஸ் திருவட்டார் தேர்தல் தனித்துணை தாசில்தாராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தலைமை உதவியாளர் வேணுகோபால் திருவட்டார் வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர். நாகர்கோவில் சப் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் சுனில்குமார் கிள்ளியூர் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் முருகன், மாவட்ட கலெக்டர் அலுவலக எல் பிரிவு தலைமை உதவியாளராகவும், கல்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஷோபனா ராணி, கிள்ளியூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.  விளவங்கோடு கூடுதல் துணை தாசில்தார் விஜயலதா, விளவங்கோடு மண்டல துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

Tags : Department ,election ,Kiliyur ,
× RELATED வரும் கல்வியாண்டில் மாணவர்கள்...