×

நாகை கலெக்டர் அலுவலகம் எதிரே தாசில்தார்கள் இடமாற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகை, பிப்.27:நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலகர்கள் சங்கம் சார்பில் தேர்தல் ஆணையம் வரும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி ஒரே மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் தாசில்தார் நிலையில் பணி முடித்துள்ள மற்றும் அதே தொகுதியை சார்ந்த தாசில்தார்களை மாவட்ட மாறுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட தோடு, நடைமுறை படுத்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் தீவிர நடவ
டிக்கை எடுத்து வருகிறது. இது வருவாய் துறையில் மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இதனை அனுமதித்தால் வருவாய்த்துறையில் மோசமான சூழ்நிலை உருவாக்கும். இந்த உத்திரவினை திரும்ப பெற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் எனவும், பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட தலைவர் பிரேம்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை விளக்கி அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் பேசினார். ஆர்ப்பாட்டதில்  மாவட்ட செயலாளர்  இளவரசன், மாவட்ட பொருளாளர்  பிச்சைப்பிள்ளை  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சீர்காழி: சீர்காழி ஊரா ட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் பக்கிரி சாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசெல்வி, ரெஜினாராணி, மேலாளர்கள் சசிகுமார், வசந்தி, ஓவர்சியர் சந்திரசேகர்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Demonstrators ,Dalits ,office ,Collector ,
× RELATED மத்தியில் காங்கிரஸ் ஆட்சி...