×

வேதாரண்யத்தில் விடுதியில் தங்கி படிப்போருக்கு வாழ்க்கை வழிகாட்டும் நிகழ்ச்சி

வேதாரண்யம், பிப்.27: வேதாரண்யம் தாலுகா தோப்புத்துறையில் விடுதி தங்கும் படிக்கும் மாணவ,  மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டும்
நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மை நல  அலுவலர் காமராஜ் தலைமை வகித்தார். மாட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பிரகாசம்  வரவேற்றார்.  நிகழ்ச்சியில் வேதாரண்யம் தோப்புத்துறை ஆயக்காரன்புலம் மற்றும்  பல்வேறு பகுதிகளில் விடுதியில் தங்கி படிக்கும் 1000க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10 மற்றும் 12ம்  வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வுக்கு பின் என்ன படிக்கலாம் என்பது குறித்து  விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழிச்சியில் ஓய்வுபெற்ற விடுதி காப்பாளர்  பாலசுப்பிரமணியன், விடுதி காப்பாளர்கள் வைரவமூர்த்தி, முரளிதரன், அகிலன்,  ராமாமிருதம், திருவாரூர் மத்திய பல்கலைகழகம் உதவி பேராசிரியர் ரூபவேல், பள்ளி  கல்வி துறை சிவக்குமார், கண்ணன் ஆகியோர் விளக்கம் அளித்தார்.   அரசினர் மாணவர் விடுதி காப்பாளர் விஸ்வலிங்கம் நன்றி கூறினார்.

Tags : stay ,Vedaranyam ,hotel ,
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...