×

இடைப்பாடி அருகே 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

இடைப்பாடி, பிப்.27: இடைப்பாடி அருகே 100க்கும் மேற்பட்டோர் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இடைப்பாடி அருகே தேவகவுண்டனூர் ஊராட்சி திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ராஜேஷ் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சுந்தரம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் நிர்மலா, நெசவாளரணி அமைப்பாளர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், திமுக ஊராட்சி செயலாளர் ரமேஷ், வார்டு செயலாளர் மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சங்ககிரி ஒன்றியம் தேவகவுண்டனூரைச் சேர்ந்த சம்பத், சீனிவாசன் ஆகியோரது தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாமக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அனைவருக்கும் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags : interstate ,DMK ,
× RELATED வெங்கமேட்டில் எல்லோரும் நம்முடன்...