×

எர்ணாகுளம், கொச்சுவேலியில் இருந்து ஐதராபாத்துக்கு சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம், பிப். 27:  கோடை விடுமுறையை முன்னிட்டு, எர்ணாகுளம், கொச்சுவேலியில் இருந்து ஐதராபாத்துக்கு சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எர்ணாகுளம், ெகாச்சுவேலியில் இருந்து சேலம் வழியே ஐதராபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம் - ஐதராபாத்துக்கு (07118) இடையே மே 2,9,16,23,30 மற்றும் ஜூன் 6,13,20,27ம் தேதிகளில்  இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.55 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

இதேபோல்,கொச்சுவேலி- ஐதராபாத்துக்கு (07116) இடையே மே 6,12,20,27 மற்றும் ஜூன் 3,10,17,24, ஜூலை 1ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கொச்சுவேலியில் இருந்து இரவு 7.45மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்கள், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, தெனாலி, குண்டூர் வழியாக ஐதராபாத்துக்கு செல்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags : Ernakulam ,Salem ,Hyderabad ,
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...