×

பர்கூரில் அகில இந்திய கைப்பந்து போட்டி தொடக்கம்

கிருஷ்ணகிரி, பிப்.27:  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கைப்பந்து கழகம் சார்பில், 14வது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் கடந்த 25ம் தேதி இரவு துவங்கியது. இப்போட்டி வருகிற மார்ச் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியின் துவக்க நிகழ்ச்சிக்கு அகில இந்திய கைப்பந்து கழக தலைவர் வாசுதேவன், ஊர் செட்டியார் ரங்கப்பன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். பர்கூர் கைப்பந்து கழக சேர்மன் தனபால், தலைவர் அசோகன், முன்னாள் எம்பி.வெற்றிச்செல்வன், செயலாளர் தங்கமணி, துணை சேர்மன் பாலன், பொருளாளர் ரவி, துணை பொருளாளர்கள் சுகுமாறன், ரங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பர்கூர் அதிமுக பேரூர் செயலாளர் துரைஸ் ராஜேந்திரன் வரவேற்றார்.    போட்டியினை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்பி., ராஜேந்திரன் எம்எல்-ஏ., முன்னாள் எம்பி.பெருமாள், பர்கூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயபாலன், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் பெருந்தலைவர் தென்னரசு, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மாதையன், பிடிஏ தலைவர்கள் திம்மிசெட்டி, வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல் நாள் போட்டியில் ஆண்களுக்கான அணியில் சென்னை இந்தியன் வங்கி அணியும், இந்தியன் நேவி அணியும் மோதின. இதில் இந்தியன் நேவி அணி 25-23, 32-30, 25-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக மகளிர் பிரிவில் சென்னை தென்னக ரயில்வே அணியும், கேரளா போலீஸ் அணியும் மோதின. இதில் கேரளா போலீஸ் அணி 25-20, 17-25, 25-21, 22-25, 15-10 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவதாக ஆண்களுக்கான பிரிவில் கர்நாடகா மாநில மின்சார வாரிய அணியும், தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதின. இதில் கர்நாடகா மரிநல மின்வார வாரிய அணி 25-18, 25-13, 25-17 என்ற புள்ளி  கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டிகள் அனைத்தும் மின்னொளியில் நடைபெறுகிறது. இந்த போட்டியை காண கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி, அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் வந்திருந்தனர். இரண்டாம் நாளான நேற்று (26ம் தேதி) முதலில் மகளிர் பிரிவில் கேரளா போலீஸ் அணியும், சென்னை தமிழக விளையாட்டு மேம்பாட்டு அணியும் மோதின. இரணடாவதாக ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டி அணியும், இந்தியன் வங்கி அணியும் மோதின. மூன்றாவதாக ஐசிஎப் அணியும், தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதின. நான்காவதாக மகளிர் பிரிவில் ஐசிஎப் அணியும், கிழக்கு ரயில்வே அணியும் மோதின. 

Tags : tournament ,India Volleyball ,Burger ,
× RELATED கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி