×

கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, பிப்.27: தர்மபுரி விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்கள் சங்க சம்மேளனம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 2014ல் முத்தரப்பு கமிட்டி ஒப்புக்கொண்டபடி கூலியை உயர்த்தி தர வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ரேஷன் திட்டத்தை பலப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்க வேண்டும். 18 ஆயிரம் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரத்தை, இலவசமாக வழங்க வேண்டும். தர்மபுரியில் ஜவுளி பூங்கா மற்றும் கூட்டுறவு சொசைட்டி ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே குறைத்து கொடுத்த கூலியை உயர்த்தி தரவேண்டும். தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களது குழந்தைகளுக்கான, உயர் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு நலவாரிய பலன்களை முழுமையாக வழங்கி, மாத ஓய்வூதியமாக 6 ஆயிரம் வழங்க வழங்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீரை, மாவட்டம் முழுவதும் சீராக வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் நாகராஜன், துணை தலைவர்கள் ஆறுமுகம் தெய்வானை, தவப்புதல்வன், மயில், சுபாஷ், மணிமாறன், பழனி, கதிர்வேல், கிருஷ்ணன், மாது, சுந்தரவேலு, சுந்தரவேல், சம்பந்தம், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Loudspeaker workers ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா